மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலிசார் பலி

இந்தியாவின் பீகார் மாநிலம், ரங்கபாத் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 'கோப்ரா' பிரிவைச் சேர்ந்த பத்து வீரர்கள் மாண்டனர்; ஐந்து பேர் காயமடைந்தனர். "எட்டு வீரர்கள் சம்பவ இடத் திலேயே பலியாகிவிட்டனர். மருத் துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர்," என்று பீகார் போலிஸ் தலைமை இயக்குநர் தாக்குர் தெரிவித்தார். இதையடுத்து, 'கோப்ரா' பிரிவுப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் மாண் டதாகக் கூறப்பட்டது.

கயாவை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஏகே=47 ரக துப்பாக்கி, எறிகுண்டு வீசும் கருவி உள்ளிட்ட பல ஆயுதங்கள் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட வீரர்கள் அனை வரும் இரு நாட்களாக அப்பகுதி யில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட் டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய, பதுங்கியுள்ள மாவோ யிஸ்ட்டுகளைத் தேடிப் பிடிக்கும் பணியில் கூடுதல் போலிசாரும் சிஆர்பிஎஃப் வீரர்களும் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!