‌ஷீலா தீட்சித் 600 கி. மீட்டர் தூரம் பேருந்தில் சூறாவளி சுற்றுப் பயணம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எப்படியாவது ஆட்சியைக் கைப் பற்றிவிட வேண்டும் என்ற துடிப் பில் காங்கிரஸ் கட்சி நேற்று தேர் தல் பிரசாரத்தைத் தொடங்கியது. அம்மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள 78 வயது ‌ஷீலா தீட்சித் 600 கிலோ மீட்டர் தூர மூன்று நாள் பேருந்துப் பயணத்தைத் தொடங்கினார்.

உத்தரப்பிரதேச மாநில சட்ட மன்றத்திற்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாடி, பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நான்கு கட்சிகளும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர முடியாத நிலையில் தனித்தே தேர்தல் களத்தில் குதித்துள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ‌ஷீலா தீட்சித் முதன் முதலில் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னாஜ் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் துக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அதன் பிறகு தோல்வி அடைந்த தால் டெல்லி மாநில அரசியலுக்கு வந்து மூன்று முறை தொடர்ச்சியாக டெல்லி முதல்வராக ‌ஷீலா தீட்சித் பதவி வகித்தார்.

இதற்கிடையே கடந்த டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலிடம் தோல்வி அடைந்த ‌ஷீலா தீட்சித் மீண்டும் உத்தரப்பிரதேச அர சியலுக்குத் திரும்பியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான நடிகர் ராஜ் பாப்பருடன் இணைந்து அவர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக ‌ஷீலா தீட்சித் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி யிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ‌ஷீலா தீட்சித்தின் தேர்தல் பிரசாரப் பயணத்தை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று தொடங்கிவைத்தனர். '27 ஆண்டுகள் பேரழிவில் இருந்த உத்தரப்பிரதேசம்' என்று தேர்தல் பிரசாரப் பயணத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!