சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு

தஞ்சை: ஆடிப் பெருக்கு விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப் பாகக் கொண்டாடப்பட்டது. மேலும், நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயமாக நேற்று ஒரே நாளில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப் பெயர்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. இத னால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகளில் நேற்று ஆடிப் பெருக்கு விழாவை சிறப்பாகக் கொண்டாடி ஏராளமான பெண்கள் வழிபாடு நடத்தினர். மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவிற்காக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கும்பகோணம் வரை சென்றது.

புதுமணத் தம்பதிகள் திரும ணத்தின் போது அணிவிக்கப்பட்ட மாலைகளைக் கொண்டு வந்து ஆற்றில் விட்டனர். தாலிக் கயிற்றை மாற்றி கொண்டனர். பிறகு சாமிக்குப் படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி, பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் மரத்தினால் செய்யப்பட்ட சப்பரங்களை விட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆடிப் பெருக்கு விழாவையொட்டி ஆற்றங்கரைகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. நகர்ப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் இந்நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!