மனைவி, குழந்தைகளைக் காருக்குள் வைத்து எரித்த ஓட்டுநர் கைது

சென்னை: சென்னையில் தனது மனைவி, குழந்தை களை காருக்குள் வைத்து எரித்த சந்தேகத்தின் பேரில் கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை ஆலை யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான நாகராஜ், தனது மனைவி பிரேமா, இரு குழந்தைகளுடன் காரில் நந்தனம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பிரேமாவையும் குழந்தைகளையும் மீட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பிரேமா உயிரிழந்தார். கார் தீப் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடிய நாக ராஜ் கைதானார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!