லட்டு விநியோகித்த விஜயகாந்த்

சென்னை: சுதந்திர தினக் கொண் டாட்ட நிகழ்வின்போது அதிகளவில் தொண்டர்களும் நிர்வாகிக ளும் திரளாததால் தேமுதிக தலை வர் விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படு கிறது. ஆண்டுதோறும் சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த வகை யில் நேற்று முன்தினம் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த் இதில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின் னர் கூடியிருந்த கட்சியினருக்கு அவர் லட்டு வழங்கினார்.

ஆனால் இந்த நிகழ்வுக்கு அதிகளவில் தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளவில்லை. இத னால் விஜயகாந்த் லட்டுகளை விநியோகித்தபோது ஏறத்தாழ ஐம்பது பேர் மட்டுமே அவற்றைப் பெற்றுக்கொண்டனர். கையில் ஏந்தியிருந்த தட்டில் லட்டுகள் நிறைந்திருந்தபோதும் யாரும் பெற்றுக்கொள்ளாததால் விஜயகாந்த் அதிருப்தி அடைந் தார். வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளுக்கு தேமுதிக மகளிரணி யினர் திரளாகக் கூடுவர். ஆனால் இம்முறை அந்த அணியிலிருந்து ஐந்து பேர் மட்டுமே வந்திருந்தனர். இதையடுத்து, நிகழ்ச்சியை சரியான முறையில் திட்டமிட்டு நடத்தவில்லை என சில நிர் வாகிகளை விஜயகாந்த் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!