சபாநாயகராக துரைமுருகன், முதல்வராக மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரு வார காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சட்டமன்ற வளாகத்தின் முன் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினர். இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன் சபா நாயகராகவும் எதிர்க்கட்சித் தலை வரான மு. க. ஸ்டாலின் முதல் வராகவும் செயல்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட 80 திமுக எம்எல்ஏக்களுடன் இடை நீக்கம் செய்யப்படாத திமுக எம்எல்ஏக்களும் இந்தப் போட்டி கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆளுங்கட்சியினர், எதிர்க் கட்சியினர் என இரண்டு வரிசை களாகப் பிரிக்கப்பட்டுக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றக் கூட் டத்தை சபாநாயகராகச் செயல்பட்ட துரைமுருகன் திருக்குறளை வாசித்து போட்டி நடவடிக்கை களைத் தொடங்கி வைத்தார். முதல்வரைப் போல ஸ்டாலின் அமர்ந்திருந்தாலும் அமைச்சர் களாக நடித்த பல உறுப்பினர்கள் "அம்மா" என்றே குறிப்பிட்டனர். காவிரி பிரச்சினையை எழுப்பிய ஸ்டாலின், "கர்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்று மையுடன் செயல்படுகின்றன," என்றார். இதனால் இந்த விவகாரம் தொடர்பில் அனைத்துக் கட்சி களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் டெல்லி அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்டாலின் வலி யுறுத்தினார். ஆர்.கே. நகரில் டெங்கிக் காய்ச்சல் அதிகரித்துவிட்டது என்று ஓர் உறுப்பினர் கூறியதற்கு அமைச்சர் போல பதிலளித்த பொன்முடி, "நான் செய்தி படிக்க வில்லை. டிவி பார்க்கவில்லை. அம்மாவிடம் கேட்டு விட்டுப் பதில் கூறுகிறேன்," என்றார்.

"எங்க தொகுதி பேரு அணைக் கட்டு. ஆனால் அங்கு எந்த அணைக்கட்டுமே இல்லையே," என்று ஓர் உறுப்பினர் குறைபட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்த துரை முருகன், "கண் தெரியாதவருக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைப் பதில்லையா அது போலத்தான் இதுவும்," என்று கூறினார். நேற்றுக் காலை ஒன்பது மணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் பேரவையின் 4வது எண் நுழைவு வாயிலுக்கு வந்தனர். இதனால் அந்த வாயில் மூடப்பட்டது. அந்த வாயில் வழியாகத்தான் எதிர்க் கட்சித் தலைவர் அறைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அங்கு கூடுதல் காவல்துறை பாது காப்பு போடப்பட்டது. இதனால் 4ஆம் எண் நுழைவு வாயில் அருகே அமர்ந்த திமுகவினர் போட்டிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!