திமுக துணைப் பொதுச் செயலர் பதவிக்கு கனிமொழி

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலராக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் கட்சித் தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பதவியைப் பலரும் குறிவைத்துள்ள நிலையில் தமது மகளையே அப்பொறுப்பில் நிய மிக்க கருணாநிதி விரும்புவதாகக் கூறப்படுகிறது.

திமுக துணைப் பொதுச்செய லராக இருந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் அண்மையில் உடல்நலக் குறை வால் காலமானார். அவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அப் பதவி வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் பெரிய சாமி துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

அதேவேளையில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, பூங்கோதை, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அப்பாவு உள் ளிட்ட பலரும் துணைப் பொதுச் செயலர் பதவிக்காக காய்களை நகர்த்தி வந்தனர். இந்நிலையில் கட்சியின் மகளி ரணிச் செயலராக உள்ள கனி மொழி எம்பியை துணைப் பொதுச் செயலராக நியமிக்க கருணாநிதி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

"கனிமொழிக்கு அப்பதவி யைக் கொடுப்பதன் மூலம் தென்மாவட்டங்களில் கட்சி வேகமாக வளரும் என்பதோடு தேர்தலில் நல்ல பலனைக் கொடுக்கும் என வும் கருணாநிதி நம்புகிறார். மேலும், கட்சியிலும் கனிமொழி கை ஓங்கும் என அவர் நினைக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!