இரண்டு நாளில் ரூ. 2,000 கோடி கடன் வழங்கிய இந்தியன் வங்கி

ராமநாதபுரம்: இந்தியன் வங்கி, கடந்த இரண்டு நாட்களில் 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. வங்கியின் பொது மேலாளர் மணி மாறன் இதனை தெரிவித்தார். ராமநாதபுரத்தில் இந்தியன் வங்கியின் வீடு, வாகன, தொழிற் கடன் வழங்கும் விழாவில் பேசிய அவர், “வாடிக்கையாளர்களுக்குக் கடந்த இரண்டு நாட்களில் 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப் பட்டுள்ளது,” என்றார். “இந்தியன் வங்கியின் 38 மண்டலங்கள் சார்பில் நாட்டில் 200 இடங்களில் கடன் விழா நடக்கிறது. இதன் மூலம் இரண்டு நாள் முகாமில் 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

“கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மந்தம், வர்த்தகத்தில் தொய்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் அளவு குறைந்து வருகிறது. வாங்கிய கடன் தொகையை வாடிக்கையாளர்கள் தவணைத் தவறாமல் திரும்ப செலுத்தினாலே வங்கிகளுக்கு நட்டம் ஏற்படாது,” என்றும் அவர் குறிப்பிட்டார். ஆவணங்களின் அடிப்படை யில் அனைத்துத் தரப்பு மக்களுக் கும் கடன் வழங்க இலக்கு நிர்ண யித்துள்ளோம்,” என்றார் இந்தியன் வங்கி பொது மேலாளர் திரு மணி மாறன்.

Loading...
Load next