கால்வாய்க்குள் பாய்ந்த பள்ளி பேருந்து; 6 உடல்கள் மீட்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 50 குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து ஒன்று முஹாவா என்ற கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், பேருந்து சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. விபத்துக் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட மேலும் 10 குழந்தை கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற குழந்தைகளை மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளதால் பலி எண் ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய குழந்தைகள் அனைவரும் பாலர் வகுப்பு படித்து வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்