தூங்கும் அதிமுக எம்பி: பரவும் காணொளி

விழுப்புரம்: ஆய்வுக் கூட்டம் நடந்தபோது தூங்கி வழிந்துள்ளார் அதிமுக நாடாளுன்ற உறுப்பினர். இது தொடர்பான காணொளிக் காட்சி வாட்ஸ் அஃப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழி வேக மாகப் பரவி வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழுப்புரத்தில் அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், அமைச்சர்கள் சி.வி.சண் முகம், விஜயபாஸ்கர், நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் விழுப்புரம் தொகுதி எம்பி ராஜேந்திரனும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அவருக்குச் சிறப்பு அழைப்பாளர்கள் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்க ளிலேயே தன்னை மறந்து உறங்கத்தொடங்கிவிட்டார் ராஜேந்திரன். இடையிடையே கண்விழித்துப் பார்த்தும், அவரால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் சொக்கியபடி தூங்கி விழுந்தார். இதைக் கண்ட சிலர் அவரது ‘தூக்கப் படலத்தை’ கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர், அக்காணொளி யைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அது தற்போது வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்