காத்திருக்கும் தமிழக காங்கிரஸ்; தனித்து களமிறங்கும் பாஜக

திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பில் திமுகவின் முடிவுக்காகக் காத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளைப் பொறுத்தே காங்கிரஸ் நிலைப்பாடு மாற்றமா, ஏற்றமா என்பது தெரியவரும் என்றார். “திமுக கூட்டணியில் இணைய பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகளை எல்லாம் திமுக ஏற்றுக் கொள்கிறதா என்பதைக் கவனிப்போம். திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசினேன். மேலும் திமுகவுடன் கூட்டணி என்பதையும் சொன்னேன்,” என்றார் திருநாவுக்கரசர். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு