தனியே தவித்த பெண் குழந்தை

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையத் தில் உள்ள கோவை செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் புதன்கிழமை இரவு ஒன்றரை வயது பெண் குழந்தை அழுது கொண்டு நின்றது. இது குறித்து அங்கிருந்த கடைக்காரர் கள் தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அக்குழந்தையை மீட்டு தாராபுரம் மகளிர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். மேலும், நகரிலுள்ள புறக்காவல் நிலையங்கள் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆயினும், அந்தக் குழந்தையைத் தேடி வியாழக்கிழமை பிற்பகல் வரை யாரும் வராததால் வேறு வழியில்லாத நிலையில் தாராபுரம் போலிசார் திருப்பூரில் உள்ள மாவட்ட சமூகநலத் துறை காப்பகத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி