ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சை: அதிமுக மறுப்பு

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விட்டதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று அவரது உடல் நலிவுக்குக் காரணங்கள் கூறப்பட் டாலும் நீரிழிவு நோயால் அவர் அவதிப்படுவதாக உறுதிசெய்யப் படாதத் தகவல்கள் தெரிவித்தன. ஆக அதிகமான மன உளைச்சல் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையே, ஜெயலலிதா சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி யோசனை தெரிவித்து இருந்தார்.

அதேபோல ‘ஸீ நியூஸ்’ தமது இணையத்தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. உடலில் சர்க்கரை அதிகரிப்பு, சிறுநீரக சிகிச்சை ஆகியவற்றுக்காக ஜெய லலிதா சிங்கப்பூர் செல்லக்கூடும் என்று தகவல் ஒன்றை மேற்கோள் காட்டி அது தெரிவித்தது. அந்தச் செய்தி வெளியானது முதல் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்பு பற்றி உண்மை நிலவரம் என்ன என்பது தெரியாமல் குழம்பினர். குழப்பம் அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில் அதிமுக தரப்பில் நேற்று உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா சிங்கப்பூர் செல் வதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்றும் அக்கட்சி யின் செய்தித் தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று செய் தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலத்துடன் உள்ளார். தெண்டர் கள் கவலை அடைய வேண்டாம், அவர் விரைவில் வீடு திரும்புவார்,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்