மருத்துவக் கண்காணிப்பில் ஜெயலலிதா

அலுவலகப் பணிகளில் தீவிரம் காட்டும் ஜெயலலிதா சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல் லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச் சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது மருத்துவப் பரி சோதனையில் கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டதால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குறைந்தது. அவர் இயல்புநிலைக்குத் திரும்பி அரசுப் பணிகளை கவனித்து வருகிறார்.

வழக்கமான உணவுகளைச் சாப்பிடும் அவருக்கு ஒவ்வொரு வேளையும் போயஸ் தோட்டத்தில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர்மட்ட போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவருக்கு உதவியாக அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் மருத்துவ மனையிலேயே தங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் கேட் டறிந்து வருகின்றனர். நேற்றுடன் ஆறாவது நாளாக மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டாலும் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். இதனால் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்