துக்க வீட்டிற்குச் சென்று திரும்பிய போது விபத்து; 14 பேர் பலி

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிபெருமாள் எனும் ஒரே கிரா மத்தைச் சேர்ந்த 14 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதிவாசி களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கச்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். அருகே இருக்கும் புதுக்குடியில் உறவினர் ஒருவர் சுவர் இடிந்துவிழுந்து இறந்துவிட்டார். இதையடுத்து, அந்தத் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக ராம நாதனும் கச்சிபெருமாளைச் சேர்ந்த மேலும் 20 பேரும் சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் புதுக்குடி சென்றனர். இறுதிச் சடங்கை முடித்துக்கொண்டு அன் றிரவே அனைவரும் அதே வாகனத்தில் ஊர் திரும்பினர்.

இரவு 8.40 மணியளவில், கிட்டத்தட்ட ஊரை நெருங்கி விட்ட நிலையில், திருச்சி=சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியுடன் சரக்கு ஆட்டோ மோதியது. இதனால் சரக்கு ஆட்டோவில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட, சம்பவ இடத்திலேயே ஐந்து பெண்கள் பலியாகினர். பெரும் சத்தம் கேட்டு ஓடி வந்த கச்சிப்பெருமாள் ஊர்க்காரர் கள், காயமடைந்தவர்களை உட னடியாக மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் அறுவர் சிகிச்சை பலனின்றி அன்றிரவே மரணமடைந்தனர்.

படுகாயமடைந்து தீவிர சிகிச் சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தோரில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்தனர். இந்த நிலையில், 14 பேரின் உயிரைப் பறித்த இந்தச் சாலை விபத்து தமக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறி, உயிரிழந்தோ ரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா லட்ச ரூபாயும் பலத்த காயமடைந்தவர் களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள் ளார். விபத்து குறித்து உடையார் பாளையம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Loading...
Load next