பாகிஸ்தானுக்கு தரும் சிந்து நதி நீரை நிறுத்துவதற்கு இந்தியா பரிசீலனை

புதுடெல்லி: சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதை நிறுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுடனான 56 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதியும் மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு விளக்கினர்.

பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என மத்திய அரசுக்கு நிர்பந்தங்கள் குவிந்து வருவதால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திறந்து விடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து 1960ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்

81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

காஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு