ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது தேர்தல் ஆணையம் - ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சித் தேர் தலை ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றார். "உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாலை ஆறு மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான மறுநாள் காலை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

"இதிலிருந்தே மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆளும் கட்சி யினுடைய தலையீடு, ஆளும் கட்சியினுடைய அராஜகம், அட்டூ ழியமெல்லாம் இந்தத் தேர்தலில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது," என்றார் மு.க.ஸ்டாலின். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் திமுக தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக தரப்பில் தேர்தலுக்குத் தடை பெற எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றார். "நாங்கள் தேர்தலை நிறுத்து வதற்கான முயற்சியில் ஈடுபட வில்லை. தேர்தலை ஒழுங்காக நடத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். "இது தொடர்பாக ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மனு செய்திருக்கிறோம்," என்றார் ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவுக்குச் சாதகமாக நடத் திட வேண்டுமென்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் திட்டமிட் டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்தையும் மீறி திமுக வெற்றி பெறும் என்றார். "ராம்குமார் பிரேத பரிசோ தனை வழக்கில் அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இக் கோரிக்கை குறித்து உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் எனத் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதுவே திமுகவின் கருத்து," என்றார் மு.க.ஸ்டாலின் இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்க திமுக தலைவர் கருணாநிதி விரும்பு வதாகவும், இதை ஸ்டாலின் ஆட்சேபணை இன்றி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!