மனைவியைக் கொன்ற கணவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது

சிவகங்கை: பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துபோனதால் மனைவியைக் கொன்ற கணவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கைதானார். சிவகங்கையைச் சேர்ந்த 68 வயதான பாலசுப்ரமணியத்தின் மனைவி விஜயா கடந்த 2013ல் கொல்லப்பட்டார். போலிசார் தீவிர விசாரணை நடத்தியும் கொலையாளி குறித்து துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கொலை நிகழ்ந்தபோது விஜயாவின் விரல் நகங்களில் சிக்கியிருந்த சில முடிகளை போலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை பாலசுப்ரமணியத்தின் நெஞ்சுப் பகுதியில் இருந்தவை எனத் தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதே இரவு வீடு திரும்பி, வேறொரு சாவியை வைத்து வீட்டுக் கதவைத் திறந்து, தூங்கிக் கொண்டி ருந்த விஜயாவின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அப்போது, விஜயா தன் நகத்தால் பாலசுப்ரமணியன் நெஞ்சில் கீறியபோது, சில முடிகள் நகத்தில் சிக்கிக்கொண்டன. இத னால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கணவர் சிக்கியுள்ளார்.

Loading...
Load next