அதிமுகவில் புகைச்சல், கடும் அதிருப்தி, போராட்டம்

மாநகராட்சித் தேர்தலில் போட்டி யிட அதிமுக வெளியிட்ட வேட் பாளர் பட்டியல் அந்தக் கட்சி யினரிடையே பெரும் அதிருப்தி யை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் அதிமுகவினர் ஆங் காங்கே பல்வேறு போராட்டங் களை நடத்திய வண்ணம் உள்ள னர். உள்ளாட்சித் தேர்தல் அறி விப்பு வெளியிடப்பட்டதும் மறு நாளே அதிமுக வேட்பாளர் பட்டி யல் வெளியானது. 12 மாநகராட் சிகளின் 919 வார்டுகளுக்கும் 31 மாவட்ட ஊராட்சிகளின் 655 வார்டுகளுக்கும் அதிமுக சார் பில் போட்டியிடுவோரின் பட்டியல் அது. பட்டியல் வெளியானதற்கு மறுநாள் உடனடியாக அனை வரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டது.

அதனால் வேட்பாளர்கள் அவசர அவரசமாக மனுத் தாக்கல் செய்வதில் ஈடுபட்டு இருந்தனர். அதே சமயம், வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோம் என்று எதிர் பார்த்து ஏமாந்த அதிமுகவினர் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். திருவள்ளூரைச் சேர்ந்த அதி முக பிரமுகர் செல்வராணி தாம் வேட்பாளராக அறிவிக் கப்படாததை அறிந்து மன முடைந்து சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை முன்பு தீக் குளித்தார். அதேபோல தேனியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவையில் கட்சிக்குத் தொடர்பில்லாத பலரும் வேட்பாளர்களாக் கப்பட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டும் அதிமுகவினர் அமைச் சர் வேலுமணி பாரபட்சம் காட்டி விட்டதாகக் கூறினர். அதனால் அமைச்சர்களையும் அதிமுக பிரமுகர்களையும் வழி மறித்து அவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு என அதிமுக அதிருப்தியாளர்களின் போராட் டம் பரவி வருகிறது. வேட்பு மனுத் தாக்கல் முடிந்த பின்னரும் போராட்டங்கள் தொடர்ந்து வரு கின்றன.