காங்கிரசுக்கு சென்னையில் 14 வார்டுகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் சென்னை மாநகராட்சியில் காங் கிரசுக்கு 14 வார்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளன என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக் கரசர் நேற்றுத் தெரிவித்தார். ஆனால் எந்தெந்த வார்டுகள், எத்தனை மகளிர் வார்டுகள் என்பது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும் என்றார் அவர். கோவை மாநகராட்சியில் 10 வார்டுகளும் நாகர்கோயில் நக ராட்சியில் 19 வார்டுகளும் காங் கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் பலர் விரும்புவார்கள். எங்களைப் போலவே திமுகவிலும் பலர் விரும்புவார்கள். எனவே கேட்ட எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காமல் போக லாம். அதற்காக திருப்தி, அதிருப்தி என்ற பேச்சுக்கு இட மில்லை,” என்று திருநாவுக்கர சர் குறிப்பிட்டார். இதற்கிடையே தமாகா மாநில துணைத் தலைவர் தேவதாஸ் உட்பட பல நிர்வாகிகள் அக் கட்சியிலிருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து பேசிய திருநாவுக் கரசர், “உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னங்களில் போட்டி யிடும் இடங்களுக்கான பேச்சு வார்த்தை ஒவ்வொரு மாவட்டத் திலும் திமுகவினருடன் நடந்து வருகிறது. இந்தப் பேச்சு திருப்தி கரமாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

Loading...
Load next