பாரிக்கர்: பாகிஸ்தானுக்கு மயக்கம் தெளியவில்லை

புதுடெல்லி: இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக் கர், பாகிஸ்தானுக்கு இன்னமும் மயக்கம் தெளியவில்லை என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் தாக்குதலைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். “அறுவை சிகிச்சை மேற் கொண்ட பிறகும் மயக்கம் தெளியாத நோயாளியைப் போல் பாகிஸ்தான் உள்ளது,” என்றார் அவர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சந்திரசிங் கர் வாலியின் உருவச் சிலையைப் பாரிக்கர் சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார்.

அப்போது இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவர் பேசினார். “இந்தியா அமைதியை விரும் பும் நாடு. தேவையில்லாமல் பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பழக்கம் நமது ராணுவத்துக்கு இல்லை. அதே நேரத்தில் பயங்கர வாதத்தை ஒருக்காலும் இந்தியா சகித்துக் கொள்ளாது. அண்மையில் நடத்தப்பட்ட தாக்கு தல் மூலம் இந்திய ராணுவத்துக்குத் தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்திருக்கும். இந்தியாவின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது. அதாவது, அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகும் மயக்கம் தெளியாத நோயாளியைப் போல் பாகிஸ்தான் உள்ளது. “பாகிஸ்தானுக்குள் அந்நாட்டு ராணுவத்தினருக்கே தெரியாமல் தாங்கள் செய்ய வேண்டியதை கச்சிதமாக முடித்துவிட்டு நமது ராணுவத்தினர் திரும்பியிருக் கின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பாரிக்கர் தெரிவித்தார்.

Loading...
Load next