சசிகுமார் கொலை தொடர்பில் சந்தேக நபர்களின் படங்களை போலிஸ் வெளியிட்டது

கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர் பாளர் சி.சசிகுமார் (36) கடந்த மாதம் 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், இக்கொலை வழக்கு தொடர் பாக சந்தேகிக்கப்படும் நபர்களின் படங்களை சிபிசிஐடி போலிசார் நேற்று முன்தினம் இரவு வெளி யிட்டனர். இதுகுறித்து சிபிசிஐடி போலி சார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொலை நிகழ்ந்த தினத்தன்று இரவு 10 முதல் 10.30 மணி வரை கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையிலுள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற் குரிய நபர்கள் சிலரின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

“அவர்கள் குறித்த விவரங்கள் வழக்கின் விசாரணைக்கு உதவி யாக இருக்கும் என்று கருதப்படு கிறது. எனவே, கேமராக்களில் பதிவாகியுள்ள சந்தேக நபர்களின் படங்களை சிபிசிஐடி வெளியிட்டுள் ளது. படங்களில் உள்ளவர்களைப் பற்றி தெரிந்தோர் கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் பிஆர்எஸ் வளாகத்திலுள்ள சிறப்புப் புல னாய்வுப் பிரிவை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள். படம்: தமிழக ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்து 50வது அடியில் சிறுவன் சிக்கியிருந்தான். படம்: ஊடகம்

15 Nov 2019

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவன் மீட்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் திரு உத்தவ் தாக்கரே. (படம்: ஏஎஃப்பி)

15 Nov 2019

சிவசேனா: உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்