ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை - சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள் கண்ணீர்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை என்று அவரது சொந்த அண் ணனின் மகள் கண்ணீருடன் கூறியிருக்கிறார். அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபாவுக்கு ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். கடந்த 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த இரண்டு வார காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை திநகரில் வசித்துவரும் ஜெயலலி தாவின் சொந்த அண்ணன் மகள் தீபா, “எனது அத்தையைப் பார்க்க அனுமதியில்லை,” என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “எனது அத்தைக்கு என் மீது அளவுகடந்த அன்பு உள்ளது. அவரது கையைப் பிடித்து உங் களுக்கு ஒன்றும் ஆகாது. விரை வில் குணமடைந்துவிடுவீர்கள் என்று கூற விரும்புகிறேன். ஆனால் அவரைப் பார்க்க எனக்கு அனுமதியில்லை,” என்றார் அவர். ஆங்கில இலக்கியம், இதழியல் படித்தவர் தீபா ஜெயகுமார். “அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதை பத்திரிகை வழியாகத்தான் தெரிந்துகொண்டேன்.

“மூன்று நாட்களாகத் தொடர்ந்து மருத்துவமனை வாசலில் காத்திருந்து அனுமதி கேட்டேன். ஆனால் அத்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அங்கு இருந்தவர்கள் நான் அர சியல்வாதியின் உறவினர் என்று நினைத்துக் கொண்டனர்,” என்றார் அவர். “கடந்த 1995ஆம் ஆண்டில் எங்களுடைய தந்தை இறந்தபோது எனது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். சிலர் எனது அத்தையை சொந்தக்காரர்களிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டனர். கடந்த 2012ல் எனது அம்மா விஜயலட்சுமி உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த போது என்னால் அத்தையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்றும் தீபா கூறினார்.