ராணுவ உடையில் வந்த மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீரில் அமைந்துள்ள லங்கட்டே ராணுவ முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூவர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல் லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி யையொட்டி பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. அதிகாலை 5 மணியளவில் ராணுவ முகாமை நோக்கி பயங்கர வாதிகள் சுட்டதாகவும் அதை அடுத்து உடனடியாக இந்திய ராணுவப் படையினர் பதில் தாக்கு தலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக் கப்பட்டது. இந்தத் தாக்குதலின்போது இந்திய ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. வேறு பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா எனத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சம்பவம் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய இந்திய ராணுவ அதிகாரி ராஜீவ் சாரங், பயங்கர வாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகள் பாகிஸ்தானில் தயா ரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது என்றும் ஆகையால் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதுவதா கவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், 'தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான்' என அந்நாட்டு போலிஸ் அதிகாரி ஒருவரே ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் போலிஸ் உயரதி காரி போல தொலைபேசியில் பேசியபோது, பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள மிர்பூர் பகுதிக் கான போலிஸ் கண்காணிப்பாளர் குலாம் அக்பர் உண்மையைக் கக்கி விட்டதாக 'நியூஸ்18' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி அதிகாலையில் சுமார் 3=4 மணி நேரத்திற்குத் தாக்குதல் நீடித்த தாகவும் அதில் பாகிஸ்தான் ராணு வத்தினர் ஐவரும் பல பயங்கர வாதிகளும் மாண்டு போயினர் என்றும் குலாம் அக்பர் சொன்ன தாக 'நியூஸ்18' குறிப்பிட்டது. அத்துடன், இந்தியாவினுள் ஊடுருவச் செய்யும் நோக்கில் பயங் கரவாதிகளை ராணுவமே அங்கு அழைத்து வந்தது என்று அக்பர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!