மீனவர்கள் பிரச்சினை: தீர்வுகாண தமிழக காங்கிரஸ் வலியுறுத்து

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது நீண்டகாலமாக நீடித்து வருவதாகவும் அதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலை வர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியில் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், தமிழக மீனவர்களை விடுதலை செய்தபோது அவர்களின் படகு களையும் சேர்த்து இலங்கை அரசு விடுவிப்பது வழக்கமாக இருந்த தாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். “தற்போது பாஜக ஆட்சி மத்தி யில் அமைந்த பிறகு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் உரிமைகளைக் காக்க மத்திய அமைச்சரவையில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று ராமேசுவரத்தில் நடந்த கடல் தாமரை மாநாட்டில் வாக்கு றுதி அளித்த பாஜகவினர் கடந்த 28 மாதங்களாக அதை நடை முறைப்படுத்தாமல் உள்ளனர்,” என்று திருநாவுக்கரசர் சாடினார். தமிழக மீனவர்களின் உரி மையை மறுக்கின்ற வகையில் இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மீனவர்க ளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, தாக்குதல் நடத்துவது போன்றவற்றை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றார்.

Loading...
Load next