பாலியல் தொல்லை: மாமனாரை கொன்று சாலையில் வீசிய பெண்

கடலூர்: கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன் பழகன். அன்பழகனின் மனைவி தமிழ்ச்செல்வி (50). அன்பழகன் இறந்துவிட்டார். செப்டம்பர் 30ஆம் தேதி சாலை ஓரம் காயங்களுடன் கந்தசாமி இறந்து கிடந்தார். சாலை விபத்து என்று வழக்குப்பதிவு செய்தது சேத்தியா தோப்பு போலிஸ். ஆனால், இந்த மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலிசார் விசா ரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து மாமனார் கந்தசாமியைக் கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வியை போலிசார் கைது செய்தனர். பின்னர் போலிசிடம் தமிழ்ச் செல்வி கூறுகையில், “எனது மாமனார் கந்தசாமி அவ்வப்போது மது அருந்திவிட்டு பாலியல் தொந் தரவு செய்து வந்தார். கடந்த 30ஆம் தேதி அவரது தொந்தரவு எல்லைமீறிப் போனது.

“தொந்தரவு பொறுக்க முடியா மல் வீட்டில் இருந்த கட்டையால் அவரை அடித்துவிட்டேன். தற்காப் புக்காகத்தான் இதனைச் செய் தேன். ஆனால் கந்தசாமி உயி ரிழந்துவிட்டார். “இதையடுத்து, கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனி டம் விஷயத்தைச் சொல்லி ஆலோ சனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார்.

“இருவரும் சேர்ந்து நள்ளிர வில் சாலையோரம் விபத்தில் அடி பட்டு இறந்ததுபோல உடலைப் போட்டோம். “மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப் பாற்றிக்கொள்ள எனக்கு வழி தெரி யவில்லை. எனவேதான் கட்டை யால் அடித்தேன்,” என்று கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்