சுடச் சுடச் செய்திகள்

லாரி-வேன் மோதலில் நால்வர் பலி

வேலூர்: லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாகப் பலியாகினர். இச்சம்பவம் அருப்புக்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 58 வயதான செல்வம், தனது உறவினர்களுடன் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்க வேனில் சென்றார்.

வெள்ளிக்கிழமை காலை அருப்புக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னே சென்ற லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இதில் அவரது உறவினர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.