வாரணாசி நெரிசலில் பக்தர்கள் பலர் பலி

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று பாபா ஜெய் குருதேவ் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பக்தர்களில் பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி 24 பேர் இறந்த தாகத் தெரிவிக்கப்பட்டது. ராஜ்காட் பாலத்தின் வழியாக பக்தர்கள் சென்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுடன் வாகனங்களும் செல்ல முயற்சி செய்ததால் கூட்டத்தில் நெரிசல் கடுமையானது. இதன் காரணமாக ஒருவரை யொருவர் தள்ளியபடி பக்தர்கள் முந்திச்செல்ல முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் கூட்டம் அதிகரித்து மேலும் நெரிசல் ஏற்பட்டதால் பலர் கூட்டத்திற்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் 14 சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காய மடைந்த பக்தர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 3,000 பேர் பங்கேற்க வேண்டிய கூட்டத்துக்கு 7,000 பேருக்கு மேல் திரண்டதால் நெரி சல் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே முதல்வர் அகி லேஷ் யாதவ், நிவாரண உதவி களை உடனடியாக வழங்க அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாலத்தைக் கடந்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. படம்: இந்திய ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு