மூன்று தொகுதிகளுக்கு நவம்பர் 19ல் இடைத்தேர்தல்

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய மூன்று சட்ட மன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மே 16ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது வாக்காளர் களுக்குப் பணம் கொடுத்ததாக எழுந்த புகார்களை அடுத்து அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரி லும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மே 23ஆம் தேதி வாக்குப்பதிவு இடம்பெறும் என அறிவிக்கப் பட்டது. பிறகு அவ்விரு தொகுதிகளி லும் ஜூன் 13ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. பின்னர், அங்கு நடக்க இருந்த தேர்தலையே ரத்து செய்வதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் ஒரு வாரத்திலேயே மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அம்மூன்று தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவம்பர் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடாமலேயே புதுச்சேரி முதல்வரானார் முன் னாள் மத்திய அமைச்சர் நாராயண சாமி. பதவியேற்ற ஆறு மாதங் களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே அவரால் முதல்வராக நீடிக்க முடியும். இந்நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஜான்குமார், அத்தொகுதி யில் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக தமது பதவியைத் துறந் தார். இந்நான்கு தொகுதிகளுக்கும் வரும் 26ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 2ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நவம்பர் 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப் படும்.