ஏழு மில்லியன் வேலைகளை இந்தியா இழக்கும் அபாயம்

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நாள்தோறும் 550 வேலைகள் பறிபோவதாகவும் இந்தப் போக்கு தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 7,000,000 வேலைகள் ஒழிந்துபோகும் என்றும் புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. விவசாயிகள், குறு வியா பாரிகள், ஒப்பந்தத் தொழிலா ளர்கள், கட்டுமான ஊழியர்கள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இதற்குமுன் இல்லாத அளவிற்கு வாழ்வாதாரத் திற்காக அவர்கள் பெரும் சிரமப் பட நேரிடும் என்றும் டெல்லியை மையமாகக் கொண்ட ‘பிரகார்’ எனும் உரிமையியல் சமூகக் குழு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் பிரிவு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளி யிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2015ல் இந்தியா 135,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. 2013ஆம் ஆண்டில் இந்த எண் ணிக்கை 419,000 ஆகவும் 2011ல் 900,000 ஆகவும் இருந்தன.

“இந்த விவரங்களை இன்னும் ஆழமாக ஆராயும்போது அச்ச மூட்டும்படியான முடிவுகள் கிட்டின. வளர்ச்சி என்பது இல்லாமல், ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரங்களை இழந்து வரு கிறோம். சராசரியாக நாளொன் றுக்கு 550 வேலைகளை இந்தியா இழந்து வருகிறது. இதே வேகத் தில் போனால், 2050ஆம் ஆண்டில் இந்தியா 7 மில்லியன் வேலைகளை இழந்திருக்கும். அதே வேளையில், மக்கள்தொகை 600 மில்லியன் உயர்ந்திருக்கும்,” என்று ‘பிரகார்’ குழுவின் அறிக்கை கூறுகிறது.