ஜெயலலிதா உடல் நிலை: வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவரை போலிசார் கைது செய்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயம் என்ற அந்த இளையரையும் சேர்த்து இதே குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 8 பேர் கைதாகி உள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கையை போலிசார் கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர் கள் வலியுறுத்தியுள்ள நிலையிலும், மேலும் 42 பேரை காவல்துறை கண்காணித்து வருவதாகத் தெரிகிறது. இந்தக் கைது நடவடிக் கையானது ஜனநாயகத் துக்கு விரோதமான செயல் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

எனினும் காவல்துறை யின் கைது நடவடிக்கை நீடித்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார் சகாயம். இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நடவ டிக்கை மேற்கொண்ட சைபர் கிரைம் பிரிவு போலிசார் தூத்துக்குடியில் வைத்து அவரைக் கைது செய்தனர். வதந்திகள் பரப்புவோர் கைது செய்யப் படுவர் எனக் காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!