‘சென்னை சிப்பெட் அலுவலகத்தை புதுடெல்லிக்கு மாற்றக்கூடாது’

சென்னை: சென்னையில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் ‘சிப்பெட்’ எனும் மத்திய பிளாஸ்டிக் பொறி யியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகத்தை புதுடெல்லிக்கு மாற்றக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத் தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் உரிய காரணம் இல்லாமல் ‘சிப்பெட்’ தலைமையகத்தை மாற் றும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றார் அவர்.

“கடந்த 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘சிப்பெட்’, மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சின் கீழ் இயங்கி வரு கிறது. பெருமை வாய்ந்த இந் நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 27 இடங்களில் உள்ளது. இங்கு 3,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 6,000 மாண வர்கள் படிக்கின்றனர். இந்நிறு வனம் லாபத்தில் இயங்கி வரு கிறது. அனைத்துலக அளவிலும் பெயர் பெற்றுள்ளது. அனைத்துலக தரத்திலும் ‘சிப்பெட்’ சென்னையில் அமைந்துள்ளது.

முன்னர் வாஜ் பாய் ஆட்சியில் இந்நிறுவனத்தை மாற்றும் முயற்சி நடந்தது. அப் போது, திமுக தலைமையிலான அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் முயற்சி கைவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ‘சிப்பெட்’ தலைமை யகத்தை மாற்றும் முயற்சியை கைவிடுவதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்,” என்று கடிதத்தில் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே இதையே வலி யுறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ், “அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ‘சிப்பெட்’ தலைமையகத்தைத் தக்கவைக்க போராட வேண்டும்,” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

“சிப்பெட் மிகப்பெரிய வரலாறும் வளர்ச்சியும் கொண்டது. தமிழ கத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட் ராமன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோது பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்த நிறுவனம் சென்னை கிண்டியில் அமைக்கப் பட்டது,” என்று தமது அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டி யிருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு