சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் பேரன் உலகநாதன் காலமானார்

தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றவருமான வ.உ.சிதம்பரனாரின் பேரன் உடல் நலக் குறைவால் காலமானார். வ.உ.சிதம்பரனாரின் பேரனான உலகநாதன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூர் கிராமத் தில் வசித்து வந்தார். இவரது குடும்பத்தார் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார் உலகநாதன். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரை குடும்பத்தாரும் உறவினர்களும் விளாத்திகுளம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர்.

அங்கு அளிக்கப்பட்ட முதற் கட்ட சிகிச்சைக்குப் பின்னர், மேல்சிகிச்சை அளிப்பதன் பொருட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். அங்கும் சிகிச்சை நீடித்த போதிலும், அது பலனளிக்காமல் உலகநாதன் இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது மறைக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்னாரின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. காலஞ்சென்ற உலகநாதனுக்கு செல்வி என்ற மகளும் கண்ணன், குமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!