பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கு தீபாவளி வாழ்த்து: மோடி அழைப்பு

புது­டெல்லி: இந்திய நாட்டு மக்கள் அனை­வ­ரும் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­குத் தீபாவளி வாழ்த்­துத் தெரி­விக்க வேண்டும் எனப் பிர­த­மர் மோடி அழைப்பு விடுத்­துள்­ளார். எல்லையைப் பாது­காக்­கும் வீரர்­களுக்­குத் தீபாவளி வாழ்த்துகளை­யும் மகிழ்ச்­சியை­யும் தெரி­விக்க வேண்டும் என வலி­யு­றுத்தி பிர­த­மர் மோடி சமூக வலை­த்த­ளத்­தில் சிறப்பு காணொளி ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். இந்த காணொளி தற்போது, பேஸ்புக் மற்றும் டுவிட்­ட­ரில் வேகமாகப் பரவி வரு­கிறது. மக்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியை நரேந்திர மோடி ஆப் மூல­மா­க­வும், மைகவ்.இன் மூல­மா­க­வும் ரேடியா மூல­மா­க­வும் தெரி­விக்­க­லாம். தூர்­தர்­ஷன் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு மக்கள் வாழ்த்­து­களைத் தெரி­விக்க சிறப்பு நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்­துள்­ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்

12 Nov 2019

ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்