வெடி வெடிக்காத வேப்பம்பட்டி - கிராமம்

தீபங்களின் ஒளித் திருவிழா என்றால் அதிகப்படியான மகிழ்ச்சி, சந்தோஷம், உற்சாகம், கொண் டாட்டமோ கொண்டாட்டம். தீபா வளி அன்று பட்டாசுகள், ரங்கோலி கோலம், விளக்கு அலங்காரம், நீண்ட நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என நாள் முழுக்க ஒன்றன்பின் ஒன் றாகத் தொடரும் உற்சாகமூட்டும் நடவடிக்கைகள். பொதுவாக பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பர்.

என்னதான் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என் றாலும் பலருக்கும் வெடிதான் தீபாவளியின் உச்சகட்ட கொண் டாட்டமாய் விளங்குகிறது. அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மத்தாப்பூ இல்லை என்றால் பெற்றோர்களால் நிம்மதி யாக இருக்கமுடியாது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிரா மமே வெடியைத் தவிர்த்து தீபா வளியைக் கொண்டாடுகிறது. இதற்குக் காரணம் வெளவால்! தமிழ்நாட்டின் தருமபுரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கிறது வேப்பம்பட்டி கிராமம். அந்த ஊருக்கே பிர தானமாக ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் வசிக் கின்றன.

அந்த வெளவால்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என் பதற்காகவே தீபாவளி ஆனாலும் வெடியை வெடிக்காமல் இருக்கிறார் கள் வேப்பம்பட்டி மக்கள். "பல தலைமுறைகளாக எங் கள் கிராமத்தில் வெடி வெடிப்பதே இல்லை. இந்த ஆலமரத்தில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான வெளவால்கள் கடவுளின் குழந் தைகள் என்பது எங்களது முன்னோர்களின் நீண்டகால நம் பிக்கை. அதுதான் உண்மையும் கூட. வெளவாலுக்கு ஏதாவது பிரச்சினை கொடுத்தால் அது கிராமத்துக்கே பெரிய ஆபத்தாக மாறிவிடும். இதை சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கும் சொல்லி வளர்ப்பதால் அவர்களும் இதைப் புரிந்துகொண்டு வெடி வெடிக்கவேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை," என்கிறார் வேப் பம்பட்டியைச் சேர்ந்த குப்பம்மாள்.

அந்த ஊரில் வாழும் படித்தவர் களிடம் விசாரித்தால் "இந்த நம்பிக்கையை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், பல கிராமத்தில் வெளவால்களே இல் லாமல் அழிந்துவிட்டன. வெளவால் கள் இருந்தால் அதன்மூலம் அந்தப் பகுதிக்கான உரங்கள் நிறைய கிடைக்கும். வெளவால் களால் பல நன்மைகள் இருக்கிறது. வெடியால் தீமைகள்தான் வரு கிறது," என்கிறார்கள். இதேபோல் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத் துக்கு அடுத்துள்ள அனுமந்தபுரம் கிராமத்திலும் சிவகங்கையில் ஒரு கிராமத்திலும் வெளவாலுக்காக வெடி வெடிக் காமல் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!