பருவ மழை தொடங்கியது

சென்னை: தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழையை 3 மாதங்களுக்கு எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முழு அளவில் சம்பா சாகுபடி செய்ய முடியும் எனத் தமிழக விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், ‘எல் நினோ’ முடிவ தால் கடந்த ஆண்டைப் போல தமிழகத்தில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு இருக்காது என, பருவநிலை கணிப்பாளர் கள் கூறி உள்ளனர்.

மழை துவங்கியதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத் திற்கான நீர் திறப்பும் குறைக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்குப் பருவ மழை ஜூன் முதல் செப்டம்பர் வரையும். வட கிழக்குப் பருவ மழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் பெய்யும். தென் மேற்குப் பருவ மழை, வழக்கம் போல இந்த ஆண்டும், தமிழகத்தை ஏமாற்றிவிட்டது. அதனால், வடகிழக்குப் பருவ மழை துவங்கியதும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.