8 பயங்கரவாதிகள் மீது போலி துப்பாக்கிச் சூடு என சர்ச்சை

போபால்: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய எட்டு சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டது தொடர்பாக வெளியான காணொளி ஒன்று, இப்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இதனால், இது போலி துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என்று எதிர்க் கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ள னர். “சிமி தீவிரவாதிகள் கொல்லப் பட்ட நேரத்தில் கைக்கடிகாரம், காலணி, இடைவார் ஆகியவற்றை அணிந்துள்ளனர். சிறையில் அந்தப் பொருட்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அங்கிருந்து தப்பியவர்கள் அவற்றை அணிந்து இருந்தது எப்படி? எனவே இவை எல்லாம் நம்பும்படி இல்லை. “உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தினால்தான் முழு உண்மை களும் வெளிவரும்,” என்று ஹைதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேகாதுல் முஸ்லிம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஒவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையினர் இதை மறுத்துள்ளனர். மத்தியப்பிரதேசம் போபால் சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் எட்டு பேர் சேர்ந்து சிறைக் காவலர் ராம்சங்கர் யாத வைக் கொன்றுவிட்டுத் தப்பிய பின்னர், இவர்கள் அனைவரும் போபால் புறநகர்ப் பகுதி ஒன்றில் காவல்துறையினருடன் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப் பட்டனர். தப்பிய கைதிகளுக்கு உதவிய வர்கள் மீது நடவடிக்கை எடுக் காமல் விடமாட்டேன் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆவேசமாகக் கூறினார்.

தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினருக்குப் பாஜக தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இச்சூழலில், துப்பாக்கிச் சூடு தொடர்பான காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியானது. அதில் மலைப்பாங்கான பகுதியில் தீவிரவாதிகள் விழுந்து கிடப்பது போலவும் ஒருவனது உடலில் இருந்து அவனது இடுப் பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை அதிகாரி எடுப்பது போலவும் பதிவாகி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்