மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் பணி இடைநீக்கம்

தர்மபுரி: மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரி யர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன். இவர் நேற்று முன்தினம் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.