‘எண்மரையும் சுட்டுத் தள்ளுங்கள்’ எனும் ஆடியோவால் சர்ச்சை

போபால்: தப்பியோடிய சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர் களைக் கைது செய்யும் பொறுப்பில் இருந்த காவல் துறையினரிடம் உயரதிகாரி ஒருவர் “அந்த எட்டுப் பேரையும் சுட்டுத் தள்ளுங் கள்,” என்று கைபேசியில் உத்தரவு போட்டுள்ளார். உயர் அதிகாரியும் போலிசும் பேசிக்கொள்ளும் இந்த என்கவுண்டர் தொடர்பான ஆடியோ தற்போது வெளி யாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கைதிகள் தப்பியோடிய அன்றே போபால் நகரின் புறநகர்ப் பகுதியில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.