31 வினாடிகளில் வாயால் தேங்காய் உரிக்கும் வாலிபர்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம் பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ், 31 வினாடிகளில் வாயால் தேங்காய் உரித்துச் சாதனை படைத்துள் ளார். சில மாதங்களுக்கு முன்பு போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்தபோது நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஒரு முழுத் தேங்காயை ஒரு நிமிடத்திற்குள் பல்லால் உரித்துக் காட்டுவதாக அவர் சவால் விட்டார்.

அப்போது அந்தச் சவாலில் தோற்ற அவர் ஒரு தேங்காயை வாயால் உரிக்க ஒரு நிமிடம் 20 வினாடிகள் எடுத்துக்கொண்டார். ஆனால் முயற்சியைக் கைவிடாமல் பயிற்சி செய்து வந்த அவர், ஒரு நிமிடத்திற்குள் முழுத் தேங் காயையும் வாயால் உரிக்கத் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் நண்பர்களை மீண்டும் அழைத்து ஒரு நிமிடத்திற்குள்ளாக ஒரு முழுத் தேங் காயை அவர் உரித்துக் காட்டினார். அதையடுத்து நண்பர்கள் அளித்த ஊக்கத்தினால் அவர் தற்போது 31 நொடிக்குள்ளாக ஒரு முழுத் தேங்காயைப் பல்லால் உரித்துச் சாதனை படைத்து உள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்