பிப்ரவரி 1ல் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி காஞ்சி காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று காஞ்சி சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணிகளில் கோயில் குளம், மண்டபங்கள், தெற்கு ராஜகோபுரம் அருகே பசுமைப் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் தங்கக் கோபுரத்தை தரிசிக்கும் வசதிகளும் செய்யப்படுகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக அறிவிப்பை வெளியிட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!