கருணாநிதி, விஜயகாந்த் மீது இயக்குநர் சுந்தரராஜன் தாக்கு

மதுரை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜய காந்த் இருவரும் பதவிக்காக கட்சி நடத்தி வருவதாக திரைப் பட இயக்குநர் சுந்தரராஜன் சாடியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று விஜயகாந்த் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதாகவும், அதை மக்கள் ஏற்கவில்லை என்றும் கூறினார். “கருணாநிதி, விஜயகாந்த் இருவரும் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக கட்சி நடத்தவில்லை. விஜய காந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுத்த மக்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை,” என்றார் சுந்தரராஜன்.