பினாமி சொத்துகள் பறிமுதல்

கோவா: மக்களின் நல்வாழ்க்கை தான் எங்களின் தாரக மந்திரம். அவர்களின் வாழ்க்கையில் ஒளி யூட்டத்தான் பாஜக புதிய புதிய திட்டங்களைக் கையில் எடுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க் கிழமை கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுத்த உறுதியான முடிவைப்போல பினாமி சொத்து கள் மீது அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை பாய உள்ளது.

பினாமி சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அரசு தயங்காது என்று மோடி கோவாவில் பேசினார். இந்த முழக்கம் பினாமி சொத் துகளை வைத்திருப்பவர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத் திருப்பதாக அரசியல் நோக்கர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.