100,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜப்பான்

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு இன்னும் வலுவடைவதற்கு அச்சாரமிடப் பட்டுள்ளது. திறமை, தகுதி இருந்தும் வேலையின்றித் தவிக்கும் சுமார் ஒரு லட்சம் இந்திய இளையர் களுக்கு ஜப்பான் வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக இந்தியாவின் 'திறன் மேம்பாட்டு அமைச்சை' மேற்கோள்காட்டி 'இந்தியா டுடே' இணையத்தளம் செய்தி வெளி யிட்டு இருக்கிறது. வரும் 2020ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக் கின்றன. உலகின் ஆகப் பெரிய அவ்விளையாட்டுத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகளில் ஜப்பான் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு கட்டுமானத் துறையில் மிக மோசமான ஆள் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால், வெளிநாட்டு ஊழியர் களைப் பணியில் அமர்த்த வேண் டிய நிலைக்கு அந்நாடு தள்ளப் பட்டுள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக 10,000 இந்திய இளையர்கள் விரைவில் ஜப்பான் தலைநகர் தோக்கியோ செல்வர் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக, இந்திய திறன் மேம்பாட்டு அமைச் சின் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சித் திட்டத்துடன் ஜப்பானின் அனைத்துலகப் பயிற்சி ஒத்து ழைப்பு நிறுவனம் இணைந்து செயலாற்றும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!