வேலை செய்யாத தமிழக அமைச்சர்கள்: திருநாவுக்கரசர் புகார்

சென்னை: தமிழக முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அமைச்சர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். இதற்கான காரணம் தெரிய வில்லை என்றும், அமைச்சர்கள் இவ்வாறு வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட் டுள்ளார். "முதல்வர் ஜெயலலிதா விரை வில் பூரண நலம் பெறுவார். அதற்காக தமிழக அமைச்சர்கள் வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல. இரவில் சென்று கோவில்களில் வழிபாடு நடத்துங் கள். பகலில் கோட்டையிலும், மக் கள் மத்தியிலும் இருங்கள்.

"அப்போதுதான் நிறைவு பெற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள் ளன," என்றார் திருநாவுக்கரசர். கடல் எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் கூறியிருப் பதை ஏற்க இயலாது என்று குறிப் பிட்டுள்ள அவர், இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இந்த ஆணையை திரும்ப பெற தமிழக அரசு மத்திய அரசின் மூலமாக முயல வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

திருநாவுக்கரசர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!