ஆயிரம் ரூபாய் நானூறு ரூபாயாக சுருங்கியதால் வேதனை

ஸ்ரீநகர்: அனைத்துலக உடற்குறை உள்ளோர் தினமான நேற்று ஜம்மு காஷ்மீர் உடற்குறையாளர் சங் கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஸ்ரீநகரில் 'பிரஸ் என்கிளேவ்' கட்டடத்தின் முன்னால் நேற்றுக் காலை ஒன்றுதிரண்ட அவர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கம் எழுப் பினர். குறிப்பாக, 5 கிலோ மீட்டர் சுற் றளவுக்குள்ளேயே தங்களுக்கு வேலையிடம் வழங்கப்பட வேண்டும்,

ஆயிரம் ரூபாயாக உள்ள மாதாந்திர உதவித் தொகையை ஆறாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது போன்றவை அவர்களின் முக்கிய கோரிக்கை களாக உள்ளன. மேலும், காது கேளாதோர், கண் பார்வையற்றோர் ஆகியோ ருக்கு இலவசக் கல்வி அளிக்கப் பட வேண்டும் என்றும் அவர்கள் முழங்கினர். அரசாங்க உதவித் தொகை கைக்கு வரும்போது பாதிக்கு மேல் குறைந்துவிடுவதாக நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை யான சிராஜுதீன் என்பவர் தெரி வித்தார். "அரசாங்கம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருகிறது. ஆனால், அதிகாரிகள் 400 ரூபாய் தான் தருகிறார்கள்," என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தைக் கைவிட மறுத்த உடற்குறையுள்ள ஆடவரை போலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!