சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை மையப்படுத்தி, சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் இவை. ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர வேண்டும் என சசிகலாவை கோரும் அதிமுகவினரின் வேண்டுகோள் அடங்கிய இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். தமிழகத்தின் சில ஊடகங்கள் சசிகலாவுக்கு எதிராக பல யூகச் செய்திகளை வெளியிட்டு வரும் வேளையில் அதிமுகவினரிடம் இருந்து சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வருவதை இதுபோன்ற சுவரொட்டிகள் காட்டுகின்றன. படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!