பாக். தொழிலாளி கொலை வழக்கு: இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை

அல் அய்ன்: பாகிஸ்தான் தொழிலாளி கொலை வழக் கில் கைதான இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அமீரக நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அபுதாபி அருகே அல் அய்ன் பகுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர். இங்கு வசித்த பாகிஸ்தான் தொழி லாளி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு அமீரக அல் அய்ன் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப் பட்டது. கொலை வழக்கில் கைதான 11 பேரில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் இந்த 11 பேரும் சேர்ந்து 2 லட்சம் திர்ஹாம் (சுமார் ரூ.36 லட்சத்து 71 ஆயிரம்) அபராதமாகச் செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத் துக்குத் தெரிவிக்கப்பட்டது. "மரண தண்டனை விதிக்கப் பட்ட 10 பேரும் தீர்ப்பை எதிர்த்து அபுதாபி நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய் வதற்கு இந்தியத் தூதரகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். தீர்ப்பு ஆவணங்களைக் கொண்டு இந்த மாதத்துக் குள் மேல்முறையீடு செய்யப்படும்," என்று இந்தியத் தூதரக அதிகாரி தினேஷ் குமார் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!