பேரறிவாளனின் மனுவுக்குப் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தடா நீதிமன்றம், சென்னை உயர் நீதிம ன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை குறித்து அமைக்கப்பட்ட சிறப்புப் பல் நோக்கு விசாரணை முகமை 19 ஆண்டுகளாக எவ்வித இலக்கும் இன்றிச் செயல்பட்டு வருகிறது. சிபிஐ தரப்பில் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

"இதற்காகப் பல கோடி ரூபாய் செலவிடப் பட்டுள் ளது. ஆனால் எந்த முன்னேற்றமுமில்லை. இந்த விசாரணையில் என்னைப் பற்றி என்ன கூறப் பட்டுள்ளது என்ற தகவல் இருட்டடிப்பு செய்ய ப் பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் சிறப்புப் பல் நோக்கு விசாரணை முகமையின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது. பேரறிவாளனின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிமன்ற ஆணை அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!