சசிகலாதான் பொதுச் செயலாளர்

சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பதவியைப் பெற சசி கலா முயன்று வருகிறார். அவ ருக்கு கட்சி நிர்வாகிகள் மட்டத் தில் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், சசிகலா பொதுச் செயலாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப் படுவது உறுதி என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள ஜெயலலிதா நினை விடத்தில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய பொன்னையன், "பெரியம்மா ஜெயலலிதாவின் மன சாட்சியாகத் திகழ்ந்தவர் 'சின்னம்மா' சசிகலா.

"ஜெயலலிதாவின் புகழுக்கு உறுதுணையாக இருந்தவர் சசி கலா. சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக் கப்படுவார். "அது உறுதி செய்யப்பட்டுவிட் டது. "அதிமுக பொதுக்குழு, செயற் குழு விரைவில் கூட இருக்கிறது. பெரியம்மா ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காப்பதில் தியாகச் செம் மலாகத் திகழ்ந்தவர் 'சின்னம்மா' சசிகலா," என்றார் அவர்.

சசிகலாவை நேரில் சந்தித்த அதிமுகவினர், கட்சித் தலைமை ஏற்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!